×

ரஷ்யா எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு மேலும் 19 ஆண்டு சிறை

மாஸ்கோ: ரஷிய அதிபர் புடினையும், அவரது அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. கடந்த 2020ம் ஆண்டு இவரை கொலை செய்யும் நோக்கில் விமான நிலையத்தில் அவர் குடித்த டீயில் நோவிசோக் என்ற ரசாயன நஞ்சு கலந்து கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நவால்னி ஜெர்மனியில் சிகிச்சை பெற்று மீண்டும் ரஷியா திரும்பியபோது விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.

பழைய பண மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ரஷிய கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதுதவிர நவால்னி மீது மோசடி மற்றும் கோர்ட்டு அவமதிப்பு வழக்குகள் பதியப்பட்டு, மேலும் 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து நவால்னி மாஸ்கோவின் கிழக்கே உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், பயங்கரவாத செயல்களுக்கு துணை போனதாக கூறி அலெக்சி நவால்னி மீது பதியப்பட்ட மற்றொரு வழக்கில், அவருக்கு மேலும் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ரஷிய கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

The post ரஷ்யா எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு மேலும் 19 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Russia ,Alexei Navalny ,Moscow ,President ,Putin ,
× RELATED உக்ரைன் போருக்கு மத்தியில் அணு ஆயுத போர் பயிற்சி: ரஷ்யா பகிரங்க அறிவிப்பு